விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் ரூ.50 கோடி செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு விழுப்புரம் பகுதி மக்களுக்கு கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை கண்டித்து நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்100-க்கும் மேற்பட்டோர் வி.மருதூர் ஏரியில் போராட்டம் நடத்தினர். வி.மருதூர் ஏரி மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அகிலன் தலைமை தாங்கினார். இப்போராத்தில் சமூக ஆர்வலர்கள் நாராயணன், மோகன், சதீஷ், சிவகுரு, பாபு, நத்தர்ஷா, சிகாமணி, பாண்டியன், அய்யப்பன், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இத்தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், ஏரியில் நடைபெற்று வரும் பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு சென்றனர். அதன்பிறகு அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago