ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கரோனா நோய் தடுப்பூசி : தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு வரும் 12-ம் தேதி மெகா கரோனா தடுப்பூசி முகாமை நடத்த உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 18 லட்சம் மக்கள் உள்ளனர்.

இதில் 18 வயது பூர்த்தியடைந்த வர்கள் 14 லட்சத்து 58 ஆயிரத்து 230 பேர். இதில் முதல் தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 46 ஆயிரத்து 61 பேர் செலுத்தி உள்ளனர். 37 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசிசெலுத்தி உள்ளனர். குறைந்தபட்சம் 80 சதவீதம் வரை தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்கு மொத்தம் சுமார் 11 லட்சம்பேர் வரை தடுப்பூசி செலுத்த வேண்டும். அதே போன்று 2-வது தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர். மற்ற மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டத்தில்தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறைவாக உள்ளனர். மாவட்டத்தில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிகளவில் கையி ருப்பில் உள்ளன. மொத்தம் 1 லட்சத்து30 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. வரும் 12-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அதற்கு 605 குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 100 பயிற்சி டாக்டர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் 605 முகாம்களில் தடுப்பூசி போடும்பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர 50 நடமாடும் மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் மாற்றுத் திறனாளிகள், வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாத முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர். இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்