உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப் பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட் டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிர மாக செய்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்கள், 2,079 கிராம ஊராட்சி வார்டுகள், 138 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வார்டுகளின் பதவி களுக்கான தேர்தல், வாக்குச் சீட்டு அடிப்படையில் விரைவில் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக் காளர் பதிவு அலுவலர்களாக அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் (பிடிஓக்கள்) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவை தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மறு சீரமைக்கப்பட்ட வார்டு எல்லைக்குட்பட்டு, வார்டு வாரியான ஆண்கள் மற்றும் பெண் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலூர் மாவட்டத்தில் 1,331 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வுகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
7 ஊராட்சி ஒன்றியத்திலும் தனித்தனியாக வாக்கு எண் ணிக்கை நடைபெற உள்ளது.வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக் கான வாக்குகள் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி ஒன்றியத்துக்கானவாக்குகள், அரசு சட்டக் கல்லூரியிலும், அணைக்கட்டு ஒன்றியத்துக்கான வாக்குகள் இறைவன்காடு அன்னை பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் ஒன்றியத்துக்கான வாக்குகள் கே.எம்.ஜி. கலைக்கல்லூரியிலும், கே வி.குப்பம் ஒன்றியத்துக்கான வாக்குகள் சென்னாங்குப்பம் வித்யா லட்சுமி மெட்ரிக் பள்ளியிலும், பேரணாம்பட்டு ஒன்றியத்துக்கான வாக்குகள் இஸ்லாமியா கல்லூரியிலும், கணியம்பாடி ஒன்றியத்துக்கான வாக்குகள் கணாதிபதி துளசிஸ் கல்லூரி என 7 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த மையங்களில் மேற் கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதில், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனமுடன் கையாளப்பட்டு வருவதாகவும், இந்த வாக்கு எண்ணும் மையங்கள் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago