ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கான - அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தில் ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி’ திட்டத்துக்கான அடிப் படை புள்ளி விவரங்கள் சேகரிப்பு முகாம் நடைபெற்றது.

தமிழக அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடப்பு ஆண்டில் (2020-21) ‘கலைஞரின் அனைத்து கிராமஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை’ செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் 42 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிப்பு முகாம் தொடங்கியுள்ளன.

அதன்படி, நாட்றாம்பள்ளி வட்டம் தெக்குப்பட்டு கிராமத்தில் இத்திட்டத்துக் கான அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு விவசாய இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார். பிறகு, தெக்குப்பட்டு ஏரியை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, ‘‘வேளாண் மற்றும் உழவர் நலத் துறையால் தமிழ்நாடு நீடித்த மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் சார்பில் மானாவாரி நில விவசாயிகளுக்கு கோடை உழவு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,250 மற்றும் 50 சதவீதம் மானியத்தில் விதை மற்றும் திரவ உயிர் உரம் வழங்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இத்திட்டம் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாட்றாம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தெக்குப்பட்டு கிராமத்தில் சுமார் 100 ஹெக்டேர் பரப்பில் மானாவரி பயிர் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. இந்த பயிர் வகைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.தெக்குப்பட்டு கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், வேளாண் துணை இயக்குநர் சீனிவாசன், உதவி இயக்குநர் சுரேஷ், உணவு பாது காப்பு இயக்க தொழில்நுட்ப ஆலோசகர் வாசுதேவரெட்டி, நாட் றாம்பள்ளி வட்டாட்சியர் பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்