சிதம்பரத்தில் - மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நேற்று சிதம்பரம் சார் - ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற் றவர்கள், சிதம்பரம், புவனகிரி வட்டத்திலுள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு கிளியனூர், ஆதனூர், அம்புஜவல்லிபேட்டை, கூடலையாத்தூர் ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்து கொடுக்க வேண்டும்; 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்பாக திருத்துவது கூடாது; விவசாயத்தை சீரழிக்கும் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன் தலைமை தாங்கினார்.

சிஐடியூ மாநில துணைத் தலைவர் கருப்பையன் கண்டன உரையாற்றினார்.

மாவட்ட துணை தலைவர் சங்க மேஸ்வரன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள் சிதம்பரம் சார் - ஆட்சி யர் மதுபாலனை சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்