கடலூர், வடலூர், திட்டக்குடியை தரம் உயர்த்த ஆலோசனை :

கடலூர் பெருநகராட்சியை மாநக ராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடி பேரூராட்சிகளை நகராட்சியாகவும் தரம் உயர்த்துவது குறித்து முதல் கருத்து கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

கடலூர் பெருநகராட்சியை மாநகராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடி பேரூராட்சிகளை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும் போது மக்களுடைய பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கைத் தரம் உயரும், எனவே அனைத்து தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்து கருத்துக்களை இரண்டாம்கட்ட கூட்டத்தில் தெரிவிக்கலாம். தங்களது கருத்துக்களை எழுத்துபூர் வமாக தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராம ஊராட்சியை நகராட்சி யாக தரம் உயர்த்துதல் தற்போதுபதவி வகிக்கும் உள்ளாட்சி பிரதி நிதிகளுக்கு எவ்வித இடையூறும் தங்களது பதவி காலத்தில் (5 ஆண்டுகள்) ஏற்படாது என்று கூறினார்.

இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதி கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வல தொண்டு நிறுவ னங்கள், குடியிருப்போர் நலச்சங் கங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்