விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. அங்கு காட்சிப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட கல்மரத்துண்டு சுற்று சுவரோரம் வீசப்பட்டு கிடந்தது.
“புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல் மரத்துண்டை அங்கு வைப்பதற்காக எடுத்து வந்திருக்கிறார்கள். அதை புதிய கட்டிட வளாகத்திற்குள் கிடத்தி வைத்திருக்கலாம். அதை விடுத்து ரோட்டோரம் போட்டு வைத்திருத்திருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று கல்மரம். இம்மாவட்டத்திலேயே தொடர்ந்து பணியாற்றும் புவியியல் சார் பணியாளர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாதது வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டு, வலை தளங்களில் படத்துடன் தகவல் பரவியது.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று காலை நடைபயிற்சியுடன் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மோகன், சாலையோரம் வீசப்பட்டுள்ள கல்மரத்துண்டை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதனை அலுவலகம் உள்ளே கொண்டு சென்று, பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago