தேர்தல் வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கம்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் சி.நில வழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெயபாண்டி, பொருளாளர். லட்சுமி, கிருபாவதி, ஜெயபாண்டி யம்மாள், மணிமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாநிலப் பொருளாளர் பி.பேயத்தேவன் சிறப்புரையாற் றினார். குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி, பெரியகுளம், போடி, பாளையம், சின்னமனூர், க.மயிலாடும்பாறை ஆகிய இடங் களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago