இந்திய அஞ்சல் துறை பொதுமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் பொதுமக்களின் வசதிக்காக சேவை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அஞ்சல் அலுவலகங்கள் இல்லாத பகுதிகளில் அஞ்சல் துறையின் குறிப்பிட்ட சேவைகளை மக்கள் பெறும் வகையில் இந்த சேவை மையங்கள் தொடங்கப்படுகின்றன. பதிவு தபால், விரைவு தபால், மணியார்டர் அனுப்புதல் மற்றும் தபால் தலை வாங்குதல் போன்ற குறிப்பிட்ட சேவைகளை இந்த மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
தூத்துக்குடியில் இரண்டாம் ரயில்வே கேட் அருகேயுள்ள சத்திரம் தெரு மற்றும் டேவிஸ்புரம் ஆகிய இரண்டு இடங்களில் அஞ்சல் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் என்.ஜே.உதயசிங் தொடங்கி வைத்தார்.
கோட்ட உதவி அஞ்சல் கண் காணிப்பாளர் எஸ்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago