விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்து பேசியதாவது: கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை அரசுநடைமுறைப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை சமய விழாகொண்டாட்டங்களுக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழாகொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச்சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில்சிலைகளைக் கரைப்பதற்கும்அனுமதிக்கப்படுகிறது.
தனி நபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago