மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு மதிப்பீடு முகாம் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் சாரு முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி முகாமை தொடங்கி வைத்தார். மேலும், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி, 2 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் என, மொத்தம் ரூ.5.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

பயிற்சி முகாம்

விளாத்திகுளத்தில் பாதுகாப்பான மற்றும் முறையான பூச்சிக்கொல்லிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. கனிமொழி எம்.பி. முகாமை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், இடுபொருட்கள் வழங்கினார். உழவர்களின் கூட்டு நிறுவனமான தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி சார்பில் ‘கரிசல் பூமி’ என்ற பயறு வகை விதைகள் அறிமுகம் செய்யப்பட்டன. டெல்லி ஹில் நிறுவன பொதுமேலாளர் சஷாங் சதுர்வேதி, திட்டம் குறித்து விளக்கினார். தொடர்ந்து, விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரத்தில் வேளாண் பொறியியல் துறை நிதியுதவியுடன் செயல்படும் மதிப்பு கூட்டுதல் மையத்தை எம்.பி. திறந்து வைத்து பார்வையிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்