திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடி யாக அகற்ற வேண்டும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பத்தூர் மாவட் டத்தில் கிராம ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட தனியார் மற்றும் பொது இடங்களில் எந்த ஒரு கட்டிடம் மீதும் பொதுமக்கள் பார்வைக்காக விளம்பர பதாகைகள் (பிளக்ஸ், டிஜிட்டல் பேனர், கட் டவுட், சுவர் விளம்பரம்) வைக்க மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும். ஆனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் அனுமதி பெறாமலேயே பல பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்கப் பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிப்பகுதிகளில் அனுமதி பெறாமல் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை சம்பந்தப்பட்டவர்கள் தாமாக முன் வந்து உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.
அவ்வாறு அகற்றப்படாத விளம்பர பதாகைகள் கிராம ஊராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டு அதற்கான செலவீன தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.
மேலும், அனுமதியில்லாமல் விளம்பர பதாகைகள் வைக்கும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’’. என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago