செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான மேவிஸ் தீபிகா சுந்தரவதனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 11-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்துகொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி, கல்விக் கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், நிலம், சொத்து,பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள் அடங்கிய உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணம், முழுமையாக திருப்பிவழங்கப்படும். எனவே, பொதுமக்கள் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வுகாணலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago