முத்தியால்பேட்டை ஊராட்சியை - காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : 200 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களும் இணைக்கப்படலாம் என்ற அச்சம், கிராம மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில் இந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் சுமார் 200 பேர், மாவட்ட ஆட்சியரிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். முத்தியால்பேட்டை ஊராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பணிபுரியும் மக்கள் பாதிக்கப்படுவர். அவர்கள் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழக்க நேரிடும். அதனால் முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர்.

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பணிபுரியும் மக்கள் பாதிக்கப்படுவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்