சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளுடன் - சாலையோரம் கொட்டப்பட்டிருந்த சிரிஞ்சுகள் :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருக்கண்டீஸ்வரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோத்தகுடி கிராமத்தில், சாலையோரத்தில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில் சிரிஞ்சுகள் கொட்டப்பட்டுக் கிடந்தன.

இதைக் கண்ட பொதுமக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், ஆனந்தன் அளித்த தகவலின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி நேற்று மதியம் அங்கு சென்று ஆய்வு செய்தார். இதில், 250-க்கும் மேற்பட்ட சிரிஞ்சுகளில் தலா 2 மி.லி அளவுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், இந்த ரத்த மாதிரிகள் யாரிடம் இருந்து எடுக்கப்பட்டன? இவற்றை சாலையில் கொட்டியது யார்? என்பன குறித்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக, நன்னிலத்தில் உள்ள 2 தனியார் ஆய்வகங்கள், 5 தனியார் மருத்துவ மனைகளில் விசாரணை நடைபெற்றது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்