விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்ததைக் கண்டித்து, இந்து திராவிட மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார்.
பின்னர் அந்த அமைப்பின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தடை செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை, போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் சிலை செய்யும் கைவினைக் கலைஞர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சிலைகளை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் இந்த தொழிலை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.
நமது அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தலாம் என்று அந்தந்த மாநிலங்கள் அனுமதி அளித்துள்ளன. கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும், இல்லையேல் தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago