கடன் வழங்குவதாக போலி குறுஞ்செய்தி, செயலிகள் மூலம் மோசடி : கள்ளக்குறிச்சியில் காவல்துறையினர் விழிப்புணர்வு

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சியில் காவல் துறையினர் சார்பில் கடன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சமூக வலைதளம் மூலம் நிதி சேவை தொடர்பாக வரும்போலி தகவலை நம்பி சிலர்ஏமாற்றப்படுகின்றனர். அதனை தடுக்கும் விதமாகவும் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் சார்பில் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் துண்டுபிரசுரம் வழங் கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. அப்போது மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையில் சைபர்கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்ராயன் முன்னிலையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன. அதில், உங்கள் முதலீட்டிற்கு தினந்தோறும் அதிகவட்டி தருவதாக போலியான நிறுவனங்கள் பெயரில் எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றனர். அதனை நம்பி உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாறாதீர்கள். முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பிரபலமாக உள்ள சில நபர்கள் தங்களது சுயலாபத் திற்காக கூறும் பொய்யான செயலி களை நம்பி உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாறாதீர்கள்.

உடனடி கடன் பெற கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று வரும் குறுஞ்செய்திகளையும், பிரபலமான நிறுவனங்களின் கிப்ட் பெறுவதற்கு கீழக்காணும் லிங்கை தொடரவும் அல்லது 10 குழுக்களுக்கு அனுப்புங்கள் என்று வரும் வாட்ஸப் செய்தி மற்றும் குறுஞ்செய்திகளை பார்த்தும், பகுதி நேரவேலை, தினமும் இரண்டு மணி நேரம் செலவிட்டு ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள், வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாகவோ அல்லது வேறு வகையிலோ உங்களது ஏடிஎம் கார்டு ஓடிபி அல்லது சிவிவி நம்பரை கேட்டால் யாருக்கும் கொடுக்காதீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களி டம் ஏ.டி.எம் கார்டு கொடுத்து பணம் எடுக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்