தேன்கனிக்கோட்டையில், இந்திய விடுதலை போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவு சின்னங்கள் புதுப்பிக்கப்பட்டு, புதிய மணிக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளதை ஆட்சியர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 100 ஆண்டுகள் பழமையான மணிக் கூண்டு சிதலமடைந்து காணப்பட்டது.
இதனை தொடர்ந்து மணிக்கூண்டை மருத்துவர்கள் சுப்பிரமணியன், சச்சரிதா, தேன்கனிக்கோட்டை அசோகா மருத்துவமனை நிர்வாகத்தினர் ரூ.13 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று உயிர் நீத்த தியாகிகள் மகாத்மா காந்தியடிகள், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நினைவு சின்னங்கள் மணிக்கூண்டில் பொறிக்கப்பட்டன. 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி இம்மணிக்கூண்டை, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி திறந்து வைத்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago