அனைத்துத் துறை மாவட்ட அலுவலகங்களை தென்காசியில் அமைக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சிறப்பு மாவட்ட பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரைசிங் வரவேற்று பேசினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சலீம் முகமது மீரான், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் பாலுச்சாமி வாழ்த்துரையாற்றினர். மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். தென்காசி மாவட்டத் தலைவர் திருமலை முருகன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், “சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி 14 சதவீதம், சரண்டர் விடுப்பு 21 மாத ஏழாவது ஊதியக்குழு நிலுவைத்தொகையை உடனடி யாக வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரைமுறைப் படுத்த வேண்டும். தென்காசி மாவட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த மாவட்ட அலுவலகங்களை அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க தென்காசி மாவட்ட தலைவராக திருமலைமுருகன், மாவட்டச் செயலாளராக துரைசிங், மாவட்ட பொருளாளராக வேல்ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்