வ.உ..சிதம்பரனார் 150-வது பிறந்தநாள் விழா :

திருநெல்வேலி

தென்காசி

தூத்துக்குடி பெரிய காட்டன் சாலை

வ.உ.சி. சாலையாக பெயர் மாற்றம்

வஉசியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி நகரின் முதன்மையான சாலையான மேற்கு பெரிய காட்டன் சாலை (டபிள்யூஜிசி சாலை) வஉசி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று மேற்கு பெரிய காட்டன் சாலையை வஉசி சாலையாக பெயர் மாற்றம் செய்யும் விழா நடைபெற்றது. அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை வகித்தார். ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, வஉசி சாலைக்கான பெயர் பலகையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்துநகர் கடற்கரை பகுதியில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நேருஜி பூங்கா, கைப்பந்து, கூடைப்பந்து மைதானம், ஸ்கேட்டிங் மைதானம் , ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன பயணிகள் நிழற்குடைகளை திறந்து வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE