1 லட்சம் மரக்கன்று, 60 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி : அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள், 60 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் மணக்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அரசுக்கு சொந்தமான இடங்களில் 1 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் ஒன்றியத்துக்கு 10,000 வீதம் 6 ஒன்றியங்களில் 60,000 பனை விதைகளை 10,000 பணியாளர்களைக் கொண்டு நடும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது, காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் மியாவாக்கி முறையில் குருங்காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதையும் பசுமையாக்கும் நோக்கில் அரசுக்கு சொந்தமான வளாகங்கள், புறம்போக்கு நிலங்கள், கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஹமீதுஅலி உட்பட பலர் கலந்துகொண்டனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்