அறந்தாங்கி, ஆலங்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது என மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கியில் குறுங்காடு அமைப்பதற்காக புதுக்குளத்தில் நடப்பட்டு வரும் மரக்கன்றுகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசியது: வடகாடு செட்டிகுளத்தின் கரையை ரூ.7 கோடியில் மேம்படுத்தி பூங்கா அமைக்கப்படும். புதுக்கோட்டை புதுக்குளத்தை மேம்படுத்த ரூ.5 கோடியும், மறமடக்கியில் ஊருணியை மேம்படுத்த ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆலங்குடிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி, ஆலங்குடியில் நெரிசலை தவிர்ப்பதற்கு புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து, கீழாத்தூர் நாடியம்மன் கோயிலில் ராஜகோபுரம், மண்டம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கலந்துகொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago