பூங்காக்கள், அணைகளுக்கு பொதுமக்கள் செல்ல - தி.மலை மாவட்டத்தில் 12-ம் தேதி வரை தடை நீட்டிப்பு : ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அணைகள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கான தடை உத்தரவு வரும் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணா மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து, அதனை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அணைகள் ஆகியவை, மக்களின் பயன்பாட்டுக்கு செப்டம்பர் 5-ம் தேதி (நேற்று) வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த தடை உத்தரவு மேலும் வரும் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய பொதுமக்கள் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE