திருப்பூருக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திலேயே, முதல்முறையாக நேற்றுமுதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
பணியை மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் ரயில்நிலையத்துக்கு வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு பரிசோதனை மட்டுமேமேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது தடுப்பூசி போடவும்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினசரி 500 பேருக்கு தடுப்பூசி போடப்படும். வியாழக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், அன்றுமட்டும் 1000 பேருக்குதடுப்பூசிபோட ஏற்பாடு செய்யப்படும். தடுப்பூசி அதிக அளவில்இருப்பு உள்ளது.கேரளாவில்பாதிப்பு அதிகமாக இருப்பதால்,மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
டோக்கன் விநியோகம் ரத்து
திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் இன்றுமுதல் (செப்.5)தடுப்பூசிக்கான டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பல்வேறு பகுதிகளில் சிறப்புமுகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டம் முழுவதும் 48 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எஞ்சியுள்ளவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம், என்றார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago