மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மூலிகை செடி, விதைகள் :

By செய்திப்பிரிவு

மேகலசின்னம்பள்ளியில் மக் களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மூலிகை செடிகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மேகல சின்னம்பள்ளி மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கை பொருட்டும், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பொது மக்களுக்கு மூலிகை செடிகள் மற்றும் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் டாக்டர்.சுந்தரராஜன், வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா, உதவி சித்த மருத்துவர் பிரேமா, உதவி மருத்துவர் சுப, கண்காணிப்பாளர் வெங்கடாசலபதி, கண் மருத்துவ உதவியாளர் முருகேசன், மோகன், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்