குழந்தைகள் நல குழுக்களுக்கு தலைவர், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் :

By செய்திப்பிரிவு

குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2015-ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கதகுதி வாய்ந்தவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூக பணி, சமூகவியல், மனிதநல மருத்துவம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி என இவற்றில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், சுகாதாரம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் இருக்க வேண்டும் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூக பணி, சமூகவியல், மனித மேம்பாடு, மாற்றுத் திறனாளிகுழந்தைகளுக்கான சிறப்பு கல்வி என இவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று தொழில்புரிபவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 35 வயதுமுதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர் ஆவர். விண்ணப்பப் படிவங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15-ம் தேதிக்குள் ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக பாதுகாப்புத் துறை, எண்.48, ஜே.எண்.சாலை, திருவள்ளூர்-602 001’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்