கடலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் என் எச் 45 ஏ, என்எச் 45 சி ஆகிய சாலைகளுக்கு நில எடுப்பு பணிகள்நடைபெறுகின்றன. இதனைமாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேசிய நெடுஞ்சாலை 45 ஏ வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலை பணிக் காக நிலஎடுப்பு பணிகள் இந்தியதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் விழுப்புரம், புதுச்சோரி,கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இதில் கடலூர் மாவட்டத்தில் வடபுரம் கீழ்பாதி, புதுக்கடை, நத்தப்பட்டு ஆகிய பகுதிகளில் நிலஎடுப்பு மற்றும் சாலை அமைத்தல் பணிகள் குறித்துமாவட்ட ஆட்சியர் பாலசுப்பிர மணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தேசிய நெடுஞ் சாலை 45 சி வழித்தடம் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலைக்கான நிலஎடுப்பு பணிகளை கடலூர்மாவட்டம் பண்ருட்டி கண்டரகோட்டை பகுதியில் சோமநாதர் கோயில், சித்திவிநாயகர்கோயில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வட்டம் வடகுத்து பகுதியில் வனத்துறைக்குட்பட்ட இடத்தில் நிலஎடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்களுக்கு பாதிப்பு இல்லா மல் இந்த நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அப்போது ஆட்சியர் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதுச்சேரி திட்ட இயக்குநர் சக்திவேல், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தஞ்சாவூர் திட்ட இயக்குநர் உதயசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர்கள் (நிலஎடுப்பு) சுப்பிரமணி, சிவ ருத்ரய்யா மற்றும் அரசு அலு வலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago