பெரம்பலூரில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு :

By செய்திப்பிரிவு

பெரம்பலூரில் ஆட்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீ ஸார் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சோதனை யில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

பெரம்பலூரில் ஆட்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சி.சுப்ரமணியன் தலைமையிலான குழுவினர், மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் சாந்தி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் சித்ரா, சைல்டு லைன் நிர்வாகி பட்டு ஆகியோருடன் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெரம்பலூர் நக ரில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த 6 குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவர்களை சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத் தனர். குழந்தை தொழிலாளர் களை பணியில் அமர்த்திய நிறு வனங்களின் உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்தனர்.

மேலும், குழந்தை தொழி லாளர்கள் குறித்து பொது மக்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியமாக வைத்திருக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE