தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அரியலூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது பிரதான சாலை வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து உணவின் அவசியம் குறித்து முழக்கமிட்டவாறு சென்றனர்.
நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் எம்.சிவக்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எம்.சாவித்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago