மாநகராட்சியாகும் கரூருடன் ஏமூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு :

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த் துதல் குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் பேசியது:

கரூர் நகராட்சியுடன், திருமா நிலையூர் கிராமம் (கருப் பம்பாளையம் ஊராட்சி), ஆண்டாங்கோவில் (கிழக்கு), ஆண்டாங்கோவில் (மேற்கு), காதப்பாறை, பஞ்சமாதேவி, ஆத்தூர், மேலப்பாளையம், ஏமூர் ஆகிய ஊராட்சிகள் மற்றும் புலியூர் பேரூராட்சி ஆகிய வற்றை இணைத்து கரூர் மாநகராட் சியாகவும், புஞ்சைபுகழூர் பேரூராட்சியுடன், தமிழ்நாடு காகித ஆலை பேரூராட்சி மற்றும் திருக்காடுதுறை, கோம்பு பாளையம், நஞ்சை புகழூர் ஊராட்சிகளை இணைத்து புஞ்சை புகழூர் நகராட்சியாகவும், பள்ளபட்டி பேரூராட்சியுடன் லிங்க மநாயக்கன்பட்டி ஊராட்சியை இணைத்து பள்ளபட்டி நகராட்சியாகவும் தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகளை தரம் உயர்த் துவதால் இணைக்கப்படும் பகுதிகளில் பல்வேறு அடிப் படை வசதிகள் கிடைக்கும். இதனால் வரிகள் உயரும் என அச்சப்படவேண்டாம் என்றார்.

கூட்டத்தில், கரூர் மாநகராட்சி யுடன் ஏமூர் ஊராட்சியை இணைக்க ஊராட்சி மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், 100 நாள் வேலை உள்ளிட்ட திட்டப்பணிகள் கிடைக் காது என்பதால் இம்முடிவை கைவிட வேண்டும் என வலியு றுத்தினார்.

இதேபோல, பள்ளபட்டி நகராட்சியுடன் லிங்கமநாயக்கன் பட்டி ஊராட்சியை இணைக்கவும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் எம்.லியாகத், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE