நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் :

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி விவ சாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏலாக்குறிச்சியை அடுத்த குரு வாடி மற்றும் தேளூர் கிராமங்களில் சுமார் 1,100 ஏக்கரில் நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடந்து வருகிறது. ஆனால் நிகழாண்டு இதுவரை குருவாடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால், அறுவடை செய்யப்பட்ட சுமார் 10,000 நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக கூறி விவசாயிகள், குருவாடி மாரியம்மன் கோயில் முன்பு இலைகளை விரித்து வைத்து அதன் மேல் நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட் டனர்.

தகவலறிந்து வந்த அரியலூர் வட்டாட்சியர் ராஜமூர்த்தி மற்றும் தூத்தூர் போலீஸார், போராட்டத் தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச் சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராமத்தில் உள்ள 5 பேர் கொண்ட குழு அமைத்து, நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மனு அளிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து 5 பேர் கொண்ட விவசாயிகள் குழுவை அமைத்து மனுவை அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்