தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார், மாவட்டச் செயலாளர் சீனிவாசன், மாவட்டப் பொருளாளர் உமா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் முனுசாமியை சந்தித்தனர்.
அப்போது, அவரிடம் அளித்த கோரிக்கை மனுவில் ‘‘புதிதாக குடியாத்தம் கல்வி மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அணைக் கட்டு ஒன்றியத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 6 மலை கிராம பள்ளிகளுக்கு சத்துணவுக் கூடங்கள் தொடங்க வேண்டும்.
விலையில்லா பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக விநியோகம் செய்திட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சத்துணவு, சமையல் கூடங்களில் செயல்பட்டு வரும் வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும்.
மாணவர்களுக்கு ஒளிபரப்பப்படும் கல்விதொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விவரங்களை தினசரி முதன்மைக் கல்வி அலுவலர் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்’’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
அப்போது, மாநில செயற் குழு உறுப்பினர் ஜோசப் அன்னையா, மாநில துணைத் தலைவர் ரஞ்சன் தயாளதாஸ், கல்வி மாவட்டத்தலைவர் காசி,கல்வி மாவட்ட செயலாளர் சேகர், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முன்னாள் தலைவர் எல்.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago