நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லினை அரவை செய்ய தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, நவீன அரிசி ஆலைகள் மற்றும் அரவை முகவர்களான தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு தரமான அரிசி வழங்கப்படுகிறது.
மண்டலத்தில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை வாணிபக் கழகத்தில் இணையாத தனியார் புழுங்கல் அரவை ஆலைகள் மூலம் நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு முறை திட்டத்தின் கீழ் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை அரவை செய்து கிடங்கில் ஒப்படைக்க வேண்டும்.
இதற்காக தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமை யாளர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
இந்த திட்டத்தில் இணைய விரும்பும் அரிசி ஆலை உரிமை யாளர்கள், தரமான அரிசியை அரவை செய்து வழங்குவதற்காக அரிசி ஆலைகளில் உள்ள கலர் சார்ட்டர் உள்ளிட்ட நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு முதுநிலை மண்டல மேலாளரை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago