செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு குறைகள் தொடர்பாக 147மனுக்களை அளித்தனர். இந்தமனுக்களுக்கு உடனடியாக தீர்வுகாண ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.39,500 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு2021-22-ம் ஆண்டுக்கானமானிய திட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் காட்டுப் பன்றிகள் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும், ஏரிகளை வீட்டுமனைகளாக மாற்றி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஏரி தூர்வாருதல்,விவசாயிகளுக்கு தேவையானஇடுபொருட்கள் மானிய விலையில் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்.ராம், மாவட்ட வனஅலுவலர் சத்தியமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர்சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தியாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாலர் சந்திரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சாந்தா செலின்மேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago