ஆசிரியைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் - கடலூர் அரசு பெண்கள் பள்ளியில் ஆய்வு :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு தளர்வால் கடந்த 1-ம் தேதி முதல் தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன்படி கடலூர்வேணுகோபாலபுரம் அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளியிலும் கடந்த 1-ம் தேதி முதல் ஆசிரி யர்கள் பணிக்கு வந்தனர்.

இதில் பணிக்கு வந்த ஒருஆசிரியைக்கு காய்ச்சல் இருந் தது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனாதொற்று இருப்பது நேற்று முன்தினம் (செப்.2) உறுதி செய் யப்பட்டது.

இதனால் பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் படுத்தப்பட்டது.

கடலூர் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மீரா தலைமையில் கடலூர் புதுப் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ராஜகணபதி, கவிதா மற்றும் மருத்துவக்குழுவினர் நேற்று அப்பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கரோனா தொற்று ஏற்பட்ட ஆசிரியை இருந்த அறையில் யார்,யார் இருந்தனர் என்று கேட்டறிந்தனர். தொற்று ஏற்பட்டுள்ள ஆசிரியை வகுப்பறைக்கு சென்று பாடம் எடுத்தாரா என்றும் கேட்டறிந்தனர்.

பின்னர் பள்ளியில் இருந்தஆசிரியர்கள் மற்றும் மாணவர்க ளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம்உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாரும் வெப்ப நிலை அதிகரித்து காட்டவில்லை. மேலும் மருத்துவக்குழுவினர் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றி தழையும் பார்வையிட்டனர்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்திருந்த ஆசிரியர்கள், மாண வர்கள் அனைவரும் நேற்றும் பள்ளிக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்