முஷ்ணம் அருகே நடைபெற்ற சாலைப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறி யாளர் ஆய்வு செய்தார்.
முஷ்ணம் அருகே உள்ளகுணமங்கலம்- கூடைலையாத்தூர் சாலை, பாளையங்கோட்டை - கொழை சாலை, கருவேப்பு லங்குறிச்சி- ராஜேந்திரபட்டினம் சாலை ஆகியவற்றில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இந்தபணிகளை கடலூர் நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறி யாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பரந்தாமன் நேற்றுபார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து அவர் பாளையங் கோட்டை -கொண்டசமுத்திரம் சாலை ஓரத்தில் மரக்கன்றை நட்டு இந்த ஆண்டிற்கான மரக்கன்று நடும் பணிகளை தொடக்கி வைத்தார். உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிபொறியாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago