பேச்சிப்பாறையில் 14 மிமீ மழை :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் மலையோரம் மற்றும் அணைப் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்து வருகிறது.

அதிகபட்சமாக நேற்று பேச்சிப்பாறையில் 14 மிமீ மழை பெய்திருந்தது. கன்னிமாரில் 8, பெருஞ்சாணி, புத்தன்அணையில் தலா 6, சிற்றாறு இரண்டில் 4, பாலமோரில் 13 மிமீ மழை பெய்துள்ளது. மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 450 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 433 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 63 அடியாக உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 187 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 17 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 188 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22 அடியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE