தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன், இறால் குஞ்சுகளுக்கான உயிருணவு தயாரிப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
கல்லூரியின் நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை சார்பில், ஹைதராபாத் தேசிய மீன்வளமேம்பாட்டு முகமை நிதியுதவியுடன் இப்பயிற்சி நடத்தப்பட்டது.
கல்லூரியின் நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறை இணைப்பேராசிரியர் வே.ராணி பயிற்சி ஒருங்கிணைப்பாளராக செயலாற்றினார். துறைத் தலைவர் பா.பத்மாவதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) ந.வ.சுஜாத்குமார் தலைமை வகித்து, மீன் மற்றும் இறால் குஞ்சுகளுக்கான உயிருணவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு கிராமப்புற மறுமலர்ச்சி திட்டத்தின் மாவட்ட முதன்மை அலுவலர் முத்தமிழ்செல்வன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
பயிற்சி கையேட்டை கல்லூரி முதல்வர் வெளியிட்டார். முதல் பிரதியை முத்தமிழ்செல்வன் பெற்றுக்கொண்டார்.
கல்லூரி பேராசிரியர்கள் வே.ராணி, பா.பத்மாவதி, சா.ஆதித்தன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சிஅளித்தனர். பின்னர் பயிற்சியாளர்களுக்கு மீன் மற்றும் இறால் பண்ணைகளில் குஞ்சுகளுக்கான உயிருணவு தயாரிப்பு பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட் டத்தை சேர்ந்த மீன் மற்றும் இறால் வளர்ப்பு முன்னோடி பண்ணையாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago