தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. செங்குளம் ஓடை பகுதியில் இருந்து வரும் மழைநீரை உப்பாற்று ஓடைக்கு கொண்டு செல்ல ரூ.63.87 கோடியிலும், காலாங்கரை ஓடை, கழுத பாதைஓடைகளில் வரும் மழைநீரை வடிகால் அமைத்து திருப்பிவிடும் பணிகள் ரூ.69.66 கோடியிலும் நடைபெறுகிறது.

ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து கடற்கரை வரை புதிதாக ரூ.20.40 கோடி மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, மாநகரில் மழைநீர் தேங்கும் 26 இடங்களில் சம்ப் அமைத்து மின் மோட்டார் மற்றும் பைப் லைன் அமைத்து மழைநீரை வெளியேற்றும் பணி 5 கோடியிலும், ரூ.35.84 கோடியில் தருவைகுளம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று பார்வையிட்டார். ஜெயராஜ் சாலையை ரூ.7.69 கோடியில் ஸ்மார்ட் சாலையாக மாற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் வரும் மழைக்காலத்துக்கு முன்பாக முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் தி.சாரு, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்