திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் 3 நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட் டுள்ளதால், ராஜ கோபுரம் முன்பு கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை என மூன்று நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப் பாடுகள் கடந்த ஒரு மாதமாக அமலில் உள்ளன.
இதன் எதிரொலியாக, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இதனால், கோயில் ராஜகோபுரம் முன்பு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அண்ணாமலையாரை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும் போது, “தமிழகத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. டாஸ்மாக் மதுபானக்கடையில் கூட்டம் கூடுகிறது. அரசுப் பேருந்துகளில் 50 சதவீதம் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு கூறுகிறது. ஆனால், ஒரு பேருந்தில் ஒரே நேரத்தில் 80 முதல் 90 பேர் பயணிக்கின்றனர். பொது இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடை வெளியை பின்பற்றுதல் போன்ற உத்தரவுகள் காற்றில் பறந்துவிட்டன.
இதுபோன்று விதிகளை மீறி நடைபெறும் சம்பவங்களில் பரவாத கரோனா வழிபாட்டுத் தலங்களை, குறிப்பிட்ட 3 நாட்களுக்கு திறந்தால் மட்டும் பரவிவிடும் என கூறுவது அர்த்தமற்றது. வழிபாட்டுத் தலங் களுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என அனைத்து சமய மக்களுக்கும் எண்ணம் உள்ளது.
எனவே, மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago