நீலகிரி மாவட்டத்தில் காலியாகவுள்ள 3 ஊராட்சிப் பதவிகளுக்குஇடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள தற்செயல்ஊரக உள்ளாட்சித் தேர்தல்தொடர்பாக வாக்காளர் பட்டியல், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும்அலுவலர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இறப்பு காரணமாக2021-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிவரை ஊரக உள்ளாட்சியில் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 4 (மசினகுடி ஊராட்சி ), வார்டுஎண் 11 ( சேரங்கோடு ஊராட்சி),கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் (நடுஹட்டி ஊராட்சி) வார்டு எண் 6-க்குமாக மொத்தம் 3 காலியிடங்களுக்குத் தோ்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக,சம்பந்தப்பட்ட கூடலூர், கோத்தகிரி வட்டார வளர்ச்சிஅலுவலர்களால் தனித்தனியே வாக்காளர் பட்டியல்கள் கிராம ஊராட்சி, ஒன்றிய, மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளாா்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago