திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத் துறை மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2-ல் இணைந்து, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிமாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் தடுப்பூசி முகாமை நேற்று நடத்தினர். இதில் அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:
அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். கல்லூரிக்கு வரும் போது அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், என்றார். இந்த முகாமில், மாணவ செயலர்கள் ரத்தினகணேஷ், சந்தீப் , கிருபாகரன், அருள்குமார், கீர்த்தனா ஆகியோர் மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி போட வரும் மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்தனர். நிகழ்வில், 360 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நேற்று தடுப்பூசி முகாம் நடந்தது. கல்லூரியில் பயிலும் 2 மற்றும் இறுதியாண்டு மாணவிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப், மாநகராட்சி நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago