திருப்பூர் ஏபிடி சாலையை சேர்ந்தவர் கார்த்திகைசாமி. இவர் அப்பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் விற்பனைக்காக வைக்கப்படும் நாட்டுக் கோழிகள் அடிக்கடி திருடு போயுள்ளன. இது தொடர்பாக கார்த்திகைசாமி தொடர்ந்து கண்காணித்து வந்தார். இந்த நிலையில் நாட்டுக் கோழிகள் அதிகளவில் திருடுபோனதால், இது தொடர்பாக மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதேசமயம் கோழித் திருடர்களை பிடிப்பதற்காக யாருக்கும் தெரியாமல், கடையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினார்.
கடையில் கேமரா பொருத்தியிருந்ததை அறிந்த அந்த கும்பல், மின் தடை மற்றும் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாத போது, கோழிகளை திருடி உள்ளது. இதனால் அவர் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியை சேர்ந்த மூவர் கொண்ட கும்பல், நாட்டுக்கோழியை திருடிச் சென்றனர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து, அவர் கோழி திருடர்களை இருசக்கர வாகனத்துடன் பிடிக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியது. இதையடுத்து கார்த்திகைசாமி இருசக்கர வாகனத்தை திருப்பூர் மத்திய போலீஸாரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கும்பல் கடையில் கோழி திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago