நீலகிரி மாவட்டத்தில் உள்ள 28,500 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி உதகை காந்தலில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தடுப்பூசி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 28 ஆயிரத்து 500 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணி வரும் 21-ம் தேதி வரை நடைபெற்று முழுமையாக செலுத்தி முடிக்கப்படும்.
எனவே, அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு கால்நடைகளை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கால்நடைமருந்தகங்கள், மருத்துவமனைகளில் அந்தந்த பகுதி விவசாயிகள் முகாம் நடைபெறும் நாட்களை கேட்டறிந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago