மயான வசதி அமைத்துத் தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பல்லடத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மயானம் அமைத்துத் தர வலியுறுத்தி, சமூக நீதிக்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொசவம்பாளையம் சாலை பிரிவில் சமூக நீதிக் கட்சியின்மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, “மாதப்பூர் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மயான வசதி இல்லாததால், இறப்பவர்கள் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, மயான வசதிக்காகஅப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். உடனடியாக மயான வசதியை செய்து தர வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்