விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
திருவெண்ணைநல்லூர் அருகேபெரிய செவலையில் உள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020-2021ல் அரவை பருவத்திற்கு 3.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் சர்க்கரை ஆலைகளான முண்டியம்பாக்கம் ராஜ, நெல்லிகுப்பம் ஈ ஐ டி பாரி, வேங்கூர் பண்ணாரியம்மன், வேப்பந்தட்டை தனலட்சுமி சீனிவா சன் ஆகிய சர்க்கரை ஆலைகள் தனிச்சையாக கரும்பு கொள்முதல் செய்து வருவதாக தெரிகிறது. இது கரும்பு கட்டுப்பாடி ஆணையின்படி ஒரு ஆலை பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள கரும்போ, பதிவு செய்யப்படாத கரும்போ மற்றொரு சர்க்கரை ஆலையின் அரவைக்கு எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும். தவறினால் வருவாய் வசூல் செய்யும் பிரிவின் கீழ் ஆலையின்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கரும்பு எடுத்து வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இடை தரகர்கள் மீது குற்றவியல் நடவ டிக்கை எடுக்கப்படும்.
ஆலையின் அங்கத்தினர்கள் ஆலையின் நலன் கருதி கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு விற்காமல் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்கவேண்டும். எனவே அந்தந்த ஆலைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்தே கரும்பு கொள்முதல் செய்யப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு எடுத்து வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago