ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உசிலங்காட்டுவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ் ணன்(60). ரயில் விபத்தில் தனது வலது கையை இழந்த இவர், திருமணம் செய்து கொள்ளாமல் ஊருக்கு அருகே உள்ள இடத்தில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் தலையில் படுகாயத்துடன் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக ராமகிருஷ் ணனின் சகோதரர் மருங்கப்பன் மகன் குணசேகரன் அளித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், ராமகிருஷ்ணன் தான் சேமித்து வைத்திருந்த ரூ.17ஆயிரத்தை மற்றொரு சகோதரர் கோவிந்தனின் மகன் தங்கச்சாமி (40) என்பவருக்கு இருசக்கர வாகனம் வாங்க தருவதாகக் கூறியுள்ளார். அந்த பணத்தை வாங்க ஆக.31 அன்று இரவு ராமகிருஷ்ணனின் குடிசைக்கு தங்கச்சாமி சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணன், இந்த நேரத்தில் பணத்தைத் தரமாட்டேன் எனக்கூறி திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தங்கச்சாமி கட்டையால் தாக்கியதில் ராமகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார் என தெரிய வந்தது. இதையடுத்து, தங்கச்சாமியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago