மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் - கரை திரும்பிய மீன்பிடி விசைப்படகுகளில் ஆய்வு :

By செய்திப்பிரிவு

கடலில் மீன்பிடித்து விட்டு, மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் கரை திரும்பிய விசைப்படகுகளில் ஏறி, தடை செய்யப்பட்ட வலைகள் உள்ளதா என நேற்று சோதனை நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகள், சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கடலில் மீன் பிடித்து விட்டு நேற்று அதிகாலை மல்லிப்பட்டினம் துறைமுகம் திரும்பிய விசைப்படகுகளில், தஞ்சாவூர் மீன்வளத் துறை உதவி இயக்குநர் எம்.சிவக்குமார் உத்தரவின்பேரில், மீன்வள ஆய்வாளர் பி.கெங்கேஸ்வரி தலைமையில், மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் நவநீதன், கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சண்முகசுந்தரம், சேதுபாவாசத்திரம் காவலர் கபிலன் ஆகியோர் சோதனை நடத்தினர்.இதில், தடை செய்யப்பட்ட வலைகள் ஏதும் பிடிபடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்