திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திஅணை மூலம் செயல்படுத்தப்படும் மிக முக்கிய திட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் எனப்படும் பிஏபி ஆகும். இதன் மூலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. ஒவ்வொரு சுற்று தண்ணீர் திறப்பின் போதும், காங்கயம் அருகே உள்ள வெள்ள கோவில் கிளை வாய்க்காலுக்கு கொடுக்கப்பட வேண்டிய 240 கன அடி நீரில், 50 சதவீதமான 120 கன அடிதண்ணீர் கூட தருவதில்லை எனவும்,பிஏபி பாசனத் திட்டத்தில், வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீரை வழங்கக்கோரியும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், காங்கயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று 2-ம் நாள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அங்கேயே உணவு சமைத்து, போராட்டத்தை தொடர்ந்தனர்.
காங்கயம் காளையை போராட்ட பகுதிக்கு நேற்று அழைத்து வந்தனர். ஆனால் காவல்துறையினர், பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் காளைகளை அனுமதிக்க மறுத்ததால் விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து காங்கயம்-திருப்பூர் சாலையில் காளையைநிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.இதனால், அரை மணி நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து நடந்தபேச்சுவார்த்தையில் காளையை சாலையின் ஓரமாக கட்டிவைக்ககாவல்துறையினர் அனுமதித்த தால், விவசாயிகள் சமாதான மடைந்தனர். காங்கயம்-வெள்ளகோவில் பாசன பிஏபி நீர்பாசனக்குழு தலைவர் வேலுசாமி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
கிளை மடைக்கு, மாதம் 5 நாட்கள்தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். வாய்க்காலில் 4 அடி உயரத்துக்கு வழங்கப்பட்ட வந்த தண்ணீரை, 4.4 அடி உயரத்துக்கு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago