தருமபுரி மாவட்ட பள்ளிகளில் 70 சதவீதம் மாணவர்கள் வருகை :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று சுமார் 70 சதவீத மாணவ, மாணவியர் வருகை தந்தனர்.

அரசு உத்தரவுப்படி தருமபுரி மாவட்ட பள்ளிகள் நேற்று திறக்கப் பட்டன. மாவட்டத்தில் உள்ள 355 பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் 87 ஆயிரத்து 334 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று சுமார் 70 சதவீதம் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்தனர். தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நேற்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பள்ளிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவுரை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 447 பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கற்பிக்கும் 4,335 ஆசிரியர்களில் 4,219 ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மீதமுள்ள 116 ஆசிரியர்கள் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை ஆய்வு செய்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். மேலும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்கான சான்றிதழை பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கவேண்டும். மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலையை கண்காணித்து உரிய பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். தேவைப் பட்டால் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வட்டாட்சியர் பிரதாப் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்